2024 செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல்

6 months ago
Sri Lanka
aivarree.com

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கான குறிப்பிட்ட திகதி ஜூலை மாதம் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்புகளுக்கு இணங்குவதை வலியுறுத்திய ரத்நாயக்க, தேர்தல் திகதியை தேர்ந்தெடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும் என்றும் குறிப்பிட்டார்.