தங்க விலை அதிகரிப்பு

2 weeks ago
aivarree.com

நேற்றுடன் (18) ஒப்பிடுகையில் இன்று (19) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 726,677 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் தங்கத்தின் விலை 201,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 24 கரட் 8 கிராம் தங்கத்தின் விலை 3,350 ரூபாவினால் அதிகரித்து 205,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் தங்கத்தின் விலை 184,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் தங்கத்தின் விலை 3,100 ரூபா அதிகரித்து 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.