பின்லாந்து பாடசாலையில் பயங்கர துப்பாக்கிச் சூடு – 12 வயது மாணவன் கைது

2 weeks ago
World
aivarree.com

பின்லாந்தின் வான்டாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயதான பாடசாலை மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.