வீழ்ச்சியடையும் நாட்டின் பணவீக்கம்

2 weeks ago
aivarree.com

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் பிரகாரம் 2024 பெப்ரவரி மாதம் 5.1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கையின் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை உணவு பணவீக்கம் தொடர்ந்தும் 5 சதவீதமாக காணப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த பெப்ரவரி மாதம் 5.1 சதவீதமாகக் காணப்பட்ட உணவு அல்லாத பணவீக்கம், மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனிடையே நாட்டில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக காய்கறிகள் மற்றும் பிற பயிர்கள் பயிரிடப்பட்ட 68, ஆயிரத்து 131 ஹெக்டேயர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பயிரிடப்பட்ட ஒருலட்சம் ஹெக்டேயர் நெற்பயிர்கள் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சுமார் நான்கரை மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக காய்கறி பயிர்கள் சேதமடைந்தமையினால், இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் காய்கறி விலை சடுதியாக அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.