மலேசியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

2 weeks ago
World
aivarree.com

மலேசியாவில், இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லுமுட் சிறுநகரில் உள்ள கடற்படைத் தளத்துக்கு அருகே விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.