வரி நீக்கம் தொடர்பான அறிவிப்பு

1 year ago
aivarree.com

சூரிய ஒளி மின்சார உற்பத்தி தகடுகளின் இன்வெர்ட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்களுக்கான விமான மற்றும் துறைமுக வரி (PAL) நீக்கப்பட்டுள்ளது. 

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இலங்கையில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை உக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

சிகரட், மதுபானம், வாகன சொகுசு வரி, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்டு, நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.