வட்சப் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றம்

1 year ago
World
aivarree.com

எப்போதாவது நீங்கள் வட்சப்பில் அனுப்பிய தகவல் ஒன்றை அனைவருக்கும் அழிப்பதற்கு பதிலாக, உங்களது திரையில் மாத்திரம் அழித்துவிட்டு அவஸ்த்தைக்குள்ளானது உண்டா?

சில வேளைகளில் குழுக்களில் தகவல் அனுப்பும் போது இவ்வாறு இடம்பெறுவதுண்டு.

தவறுதலாக இவ்வாறு நடக்கும் போது, சில நேரங்களில் பாரிய சிக்கல்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு தீர்வாக தற்போது உங்களுக்கு மட்டும் அழிக்கும் தெரிவை நீங்கள் தெரிவு செய்தால், அதனை மீளப் பெற்றுக் கொள்ள வட்சப் 5 நொடிகள் வாய்ப்பளிக்கவுள்ளது.

இந்த வசதி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பரீட்சார்த்த ரீதியாக அமுலாக்கப்பட்டு வந்த நிலையில் எப்பல் மற்றும் என்ட்ரொயிட் ஆகிய இரண்டு கைப்பேசிகளிலும் நடைமுறைக்கு வருகிறது.