ரூபாவின் பெறுமதியில் கணிசமான அதிகரிப்பு!

11 months ago
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூன் 01) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

  • மக்கள் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 286.12 ரூபாவிலிருந்து 282.22 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 301.50 ரூபாவிலிருந்து 297.40 ரூபாவாக குறைந்துள்ளது.
  • கொமர்ஷல் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 285.81 ரூபாவிலிருந்து 283.07 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 298 ரூபாவிலிருந்து 296 ரூபாவாக குறைந்துள்ளது.
  • சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 289 ரூபாவிலிருந்து 284 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 301 ரூபாவிலிருந்து 296 ரூபாவாக குறைந்துள்ளது.