AFGvsSL ; முதலிரு போட்டிகளிலிருந்து ரஷித் கான் விலகல்

11 months ago
SPORTS
aivarree.com

இலங்கைக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

ரஷித் கான் இலங்கைக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார், ஆனால் மூன்றாவது மற்றும் கடைசி போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) உறுதி செய்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நாளை (ஜூன் 2) ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ரஷித் கான் அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இடம்பெற்றார்.

அங்கு அவர் இறுதிப் போட்டிக்கான பயணத்தில் முக்கிய பங்கு வகித்தார்.


2023 ஐ.பி.எல்.லில் அவர் மொத்தமாக 27 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானை வழிநடத்த உள்ளார்.

மேலும் ரஷித் இல்லாததை ஈடுசெய்ய முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.