மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன ஜெனின் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

10 months ago
World
aivarree.com

இஸ்ரேலின் இராணுவம், வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் நான்கு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

திங்கள்கிழமை (03) அதிகாலை ஜெனினில் இஸ்ரேல் குறைந்தது 10 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து புகை கிளம்பியதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

பல இஸ்ரேலிய கவச வாகனங்களின் அகதிகள் முகாமை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்து, இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது, இதனால் வீடுகள் மற்றும் சாலைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு பாலஸ்தீனியர், 21 வயதான இளைஞன், மத்திய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகரின் வடக்கு நுழைவாயிலில் இஸ்ரேலிய இராணுவத்தால் திங்கள்கிழமை இரவு கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.