எண்ணெய் விலைகள் சரிவு

11 months ago
aivarree.com

வாரத்தின் முதல் நாளான திங்களன்று (03) ஆசியாவின் ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் கடந்த வெள்ளியன்று 0.8% உயர்ந்த பின்னர் திங்கள் 00. 44 GMT மணிக்குள் ஒரு பீப்பாய்க்கு 20 சென்ட் அல்லது 0.3% குறைந்து 75.21 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் வெள்ளியன்று 1.1% உயர்ந்த பின்னர், திங்களன்று 23 சென்ட்கள் அல்லது 0.3% குறைந்து ஒரு பீப்பாய் 70.41 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

உலகளாவிய பேரண்ட பொருளாதார தலையீடுகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ்ஸின் சாத்தியமான மேலும் வட்டி விகித உயர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் எண்ணெய் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.