முட்டை விலையை 6 ரூபாவினால் குறைக்கலாமாம்

1 year ago
Sri Lanka
aivarree.com

முட்டை ஒன்றின் விலையினை சுமார் 6 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனத்திற்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் (VAT) வரியை அதிகாரிகள் நீக்கினால் முட்டையின் விலையை குறைக்க முடியும் எனச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

VAT நீக்கப்பட்டால் மேலும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இருக்காது.

VAT நீக்கப்படுவதன் மூலம் உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரிப்பதுடன், உள்ளூர் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.