மீண்டும் வருகிறார் வீனஸ்

1 year ago
SPORTS
aivarree.com

ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த வீனஸ்வில்லியம்ஸ் அடுத்தாண்டு நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும், ஒக்லேண்ட் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் விளையாடவிருப்பதாக அறிவித்துள்ளார்.


42 வயதான வீனஸ் வில்லியம்ஸ், 7 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.


இறுதியாக அவர் அவுஸ்திரேலியா பகிரங்க தொடரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது சகோதரி செரீனா வில்லியம்ஸுடன் இரட்டையர் பிரிவில் ஆடி தோற்றிருந்தார்.


அவஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் 2023ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


இது அவரது 22வது அவுஸ்திரேலிய பகிரங்க தொடராக அமையவுள்ளது.