தீபாவளி தினத்தன்று மின் துண்டிப்பு இடம்பெறுமா ?

2 years ago
Sri Lanka
aivarree.com

தீபாவளி தினத்தன்று மின்சாரத்தைத் துண்டிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முன்னதாக தீபாவளி தினமான 24ஆம் திகதி 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தீபாவளி தினம் என்பதால் அன்றைய தினம் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மின்சார சபைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.