இன்றைய தங்க விலை நிலவரம்

1 year ago
aivarree.com

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நேற்றைய நிலவரத்தின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தனர்.

இதன்படி
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 172,000 ரூபா 22 கரட் தங்கம் 157,500 ரூபா.

எனினும் எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் குறைவு ஏற்பட வாய்ப்புகள் தென்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை ஓரளவு குறைவடைந்துள்ளது.

ஒரு அவுண்ஸ் தங்கம் இன்று 4.85 டொலர்கள் குறைவடைந்து, 1,953 டொலர்களாக பதிவானது.