பிரான்ஸ் வன்முறை; சுமார் 1,000 பேர் கைது

10 months ago
World
aivarree.com

17 வயது இளைஞன் உயிரிழப்பு காரணமாக பிரான்ஸில் தொடரும் நான்காவது இரவு அமைதியின்மையின் போது சுமார் ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 80 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் வன்முறைகள் குறையத் தொடங்கியுள்ளன என்று அரசாங்கம் கூறியுள்ளது.

எனினும் சேதங்கள் பரவலாக இருந்தன, மேலும் பிரெஞ்சு கயானாவில் மேற்கொள்ளப்பட்ட தவறான துப்பாக்கி பிரயோகம் காரணமாக 54 வயதான நபரொருவர் உயிரிழந்தார்.

சனிக்கிழமை (ஜூலை 01) அதிகாலை வரை பிரான்ஸ் முழுவதும் 994 பேர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

வெள்ளியன்று சுமார் 45,000 பொலிஸ் அதிகாரிகள் இலகுரக கவச வாகனங்களின் ஆதரவுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ஆனால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இருந்தபோதிலும், Lyon, Marseille மற்றும் Grenoble நகரங்களில் கொள்ளையடித்தல், தீ வைப்பு மற்றும் கலவரங்கள் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.