பால் மாவுக்கான சுங்க வரி அதிகரிப்பு

10 months ago
aivarree.com

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவுக்கான சுங்க வரி 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பால் மா மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என பால் மா நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

எவ்வாறாயினும் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவுக்கு 100 ரூபா வரியை நிதியமைச்சு அதிகரித்துள்ளது.