சுகாதார துறையின் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

10 months ago
Sri Lanka
aivarree.com

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் (GMOF) அதிகாரிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நிலவும் நட்புறவை விருத்தி செய்து அவர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது.

சம்பள முரண்பாடுகள், சம்பள உயர்வுகள், ஓய்வுபெறும் வயது, வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்புச் சேவைகளை தொடர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற தொழில்சார் விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தொடர் முன்மொழிவுகளும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தினால் சுகாதார அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.

தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து தாம் ஓரளவு புரிந்து கொண்டுள்ளதாகவும், நிதியமைச்சகம் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த துறைகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை வழங்குவதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.