பங்களாதேஷ் கடனை செப்டெம்பருக்குள் இலங்கை செலுத்தும் – மத்திய வங்கி ஆளுநர்

11 months ago
Sri Lanka
aivarree.com

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்த ஆண்டு இலங்கை செலுத்தும் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.

மத்திய வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, இலங்கை எதிர்வரும் ஒகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடனை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஏப்ரலில் பங்களாதேஷ், இலங்கையின் 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனுக்கான முதல் தவணையை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி பங்களாதேஷிடம் கால அவகாசம் கோரியதை அடுத்து, அதன் கடனை மறுசீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது.

1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை தற்போது கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ளது.