எரிபொருள் கையிருப்பு தொடர்பான எரிசக்தி அமைச்சின் முக்கிய அப்டேட்

12 months ago
Sri Lanka
aivarree.com

லங்கா ஐ.ஓ.சி. மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளமையினால் பொதுமக்கள் அது குறித்து பீதியடைய வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவுக்கான கட்டளைகளை வழங்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டீலர்கள் குறைந்தபட்சம் 50% இருப்பு வைத்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு CPCயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, 2023/06/01 காலை 08:30 மணி நிலவரப்படி அனைத்து CPSTL/CPC ஆலைகளினதும் பங்கு விவரங்கள் கீழே:

  • டீசல் – 122,769 (மெட்ரிக் டன்)
  • சுப்பர் டீசல் – 5,739 (மெட்ரிக் டன்)
  • 92 ரக பெற்றோல் – 56,797 (மெட்ரிக் டன்)
  • 95 ரக பெற்றோல் – 2,318 (மெட்ரிக் டன்)
  • JET A1 ரக பெற்றோல் – 42,625 (மெட்ரிக் டன்)