நீர் மின் உற்பத்தியும் ஆபத்தில்

2 years ago
Sri Lanka
aivarree.com

போதிய மழைவீழ்ச்சி இல்லாமையால், பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


நேற்றைய தினம் வரையில், ரன்தெம்பே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், 20.6 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.


விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 52 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளது.


காசல்றீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 42.3 சதவீதம் வரையிலும், சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 36.9 சதவீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.


எவ்வாறிருப்பினும், ரந்தனிகலை மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்மட்டத்தில் உள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.