தேர்தல் நடக்குமா நடக்காதா? | நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

1 year ago
Sri Lanka
aivarree.com

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றில் நிதியமைச்சின் செயலாளரால் சத்தியகடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் இந்த ஆண்டு 6,662 பில்லியன் ரூபாய் துண்டுவிழும் தொகையாக உள்ளது.

அரசாங்கத்துக்கு போதிய வருமானம் எதுவும் இல்லாத நிலையில் தேர்தல் ஒன்றை நடத்தினால் பெரும் நெருக்கடிகள் ஏற்படும்.

எவ்வாறாதினும், தேர்தல் குறித்த தீர்மானத்தை நிதியமைச்சு எடுக்க அதிகாரம் இல்லை என்பதால், அதனால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியகடிதத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.