சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான தீர்மானம்

1 month ago
Sri Lanka
aivarree.com

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு நிதியமைச்சில் கூடிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் சுமார் 11 இலட்சம் கணக்குகள் இருப்பதாகவும், அவற்றை முறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.