தரம் குறைந்த பெட்ரோல் விநியோகம் | CPC பதில்

1 year ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் தரம் குறைந்த பெட்ரோல் விநியோகிப்பட்டுள்ளதாகவும் சுமார் 10,000 மெட் ரிக் டன் அளவான தரமற்ற பெட்ரோல் CPCயில் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

இது தொடர்பாக பதிலளித்துள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பேச்சாளர் ஒருவர், தரம்குறைந்த எரிபொருள் என்ற வகையில் (Platformate) எண்ணெய் 4,500 மெட்ரிக் டன் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். 

மசகெண்ணெயில் இருந்து எரிபொருளை பிரித்தெடுக்கும் போது கிடைக்கின்ற ஒருவகையான எண்ணெய்யே இதுவாகும். 

இதனை பெட்ரோலாக மாற்றுவதற்கான தரமேற்றல் நடவடிக்கள் உள்ளன. 

உரிய ஒக்டேனுக்கு அவை தரமேற்றப்படாமல் சந்தையில் விநியோகிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.