சுப்மன் கில் அதிரடி 200 |நியுசிலாந்துக்கு பாரிய ஓட்ட இலக்கை கொடுத்தது இந்தியா

1 year ago
SPORTS
aivarree.com

இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ஓட்டங்களைப் பெற்றார்.

இது அவர் பெறும் முதலாவது இரட்டைச் சதமாகும்.

அத்துடன் இன்று அவர் தமது 1000ஆவது ஒருநாள் ஓட்டங்களைக் கடந்து, குறைந்த போட்டிகளில் (19) 1000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் சர்மா, கோலி, இசான் கிசான் ஹார்டிக் பாண்டியா போன்றவர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதும், சுப்மன் கில்லின் ஆட்டம் இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளது.