எரிபொருள் இறக்குமதியை பாதிக்கும் மத்திய வங்கி எடுத்துள்ள முடிவு?

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குமதி செய்தவதற்கு மத்திய வங்கியிடமிருந்து டொலர்களை பெற்று வந்தது.

எனினும் இந்த மாதம் 1ஆம் திகதியுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு டொலர்களை வழங்கும் நடவடிக்கையை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் வங்கி கட்டமைப்பில் போதியளவு டொலர்கள் இருப்பதாகவும், அதன் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான டொலரை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வங்கிக்கட்டமைப்பினூடாக போதிய டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத அவசர நிலைமைகளின் போது, மத்திய வங்கி CPCக்கு டொலர்களை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.