உத்தரவை மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் – ட்ரம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

3 weeks ago
World
aivarree.com

தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மறைக்க ஆபாச நடிகை stormy daniels க்கு ஒரு கோடி ரூபா வழங்கியது தொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கக்கூடாது என ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றை அவமதித்ததற்காக ட்ரம்ப் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9,000 டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், நீதிமன்ற உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.