உள்ளூராட்சி மன்ற ஆட்சி காலத்தை நீடிப்பதா? இன்று முடிவு

1 year ago
Sri Lanka
aivarree.com

340 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.  

இதுகுறித்த முக்கிய தகவல்கள் சுருக்கமாக:-

– இன்று முதல் உள்ளுராட்சி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி செயலாளர்களுக்கு அதிகாரங்கள் செல்லும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

– 2018 ஃபெப்ரவரி 10இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இருந்து 4 ஆண்டுகளுக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அவர்களின் பதவிக்காலம் அந்த 2018 மார்ச் 20 அன்று தொடங்கியது.  

– அந்த உள்ளுராட்சி மன்றங்களின் 4 வருட ஆட்சி காலம் கடந்த வருடத்துடன் நிறைவடைந்த போதிலும், அப்போது பொறுப்பேற்ற அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் மேலும் ஒரு வருடத்தினால் காலம் நீடிக்கப்பட்டது.

காலாவதியான 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ ஆட்சிகாலம் மேலும் நீடிக்கப்படுமா? என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.  

– உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிகாலத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை சட்ட மா அதிபர் இன்று வழங்கவுள்ளார். 

– ஆட்சிகாலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை இன்றுடன் கையளிக்க வேண்டும். 

– 2019 ஒக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்ட எல்பிட்டி பிரதேச சபையின் ஆட்சி காலம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது.