இவ்வாண்டு கணிசமாக வலுவடைந்த இலங்கை ரூபாய்

1 year ago
Sri Lanka
aivarree.com

இந்த ஆண்டில் 2023 மார்ச் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபா கணிசமாக வலுவடைந்துள்ளது. 

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 7.8 % வளர்ச்சியடைந்துள்ளது. 

இலங்கை ரூபாவுக்கு நிகராக யென் 8.3 %, ஸ்டெர்லிங் பவுண்ட் 7%, யூரோ 8%, இந்திய ரூபா 7.6% என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. 

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.