இலங்கையுடன் மோதும் நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கைக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணியினை நியூலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அணியில் இடம்பெற்ற வீரர்களையே இலங்கைக்கு எதிரான இந்த தொடரிலும் நியூலிலாந்து தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என சமநிலை செய்த நியூசிலாந்து அணியில் இருந்த 13 வீரர்களும் இலங்கைக்கு எதிரான இத் தொடரில் விளையாடவுள்ளனர்.

நியூசிலாந்து முதல் டெஸ்டில் இங்கிலாந்திடம் 267 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மற்றும் இரண்டாவது டெஸ்டில் ஃபாலோ ஆன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று தொடரை சமன் செய்தது.

இந் நிலையில் டிம் சவுத்தி தலைமையிலான அதே வீரர்கள் குழு, மார்ச் 9 ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் மோதவுள்ளது.

டெஸ்ட் தொடரை நியூசிலாந்தில் 2-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்து இலங்கையை தோற்கடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தொடருக்கான இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நியூலாந்து டெஸ்ட் அணி ; டிம் சவுத்தி ( தலைவர்), டாம் ப்ளண்டெல் (விக்கெட் காப்பாளர்), மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கொன்வே, மாட் ஹென்றி, டாம் லெதம், டேரில் மிட்செல், பிளேர் டிக்னர், நீல் வாக்னர், ஸ்கொட் குகெலிஜின், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் மற்றும் வில் யோங்.

இலங்கை டெஸ்ட் அணி ; திமுத் கருணாரத்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டீஸ், ஆஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டிசில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டீஸ், நிரோஷன் திக்வெல்ல, நிஷான் மதுஷங்க, ரமேஸ் மெண்டீஸ், பிரபாத் ஜெயசூரிய, சமிக்க கருணாரத்ன, கசூன் ராஜித, லஹிரு குமார, அஷத பெர்னாண்டோ, விஷ்வ பெர்ணான்டோ மற்றும் மிலன் ரத்நாயக்க.