அயர்லாந்துடனான போட்டியில் நிஷான் மதுசங்க இரட்டை சதம்

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கை அணியின் நிஷான் மதுசங்க சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.

காலியில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இரட்டை சதத்தினை பெற்றுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை மதியநேர உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 489 ஓட்டங்களை குவித்துள்ளது.

நிஷான் மதுசங்க 202 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் 160 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 492 ஓட்டங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

TSN