பசிலே எல்லா பிரச்சினைக்கும் காரணம்/ விமல் கடும் குற்றச்சாட்டு

2 years ago
aivarree.com

பசில் ராஜபக்ஷவே பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.

2018-19ல் பசிலுக்கு ஜனாதிபதியாகும் ஆசை இருந்தது.

ஆனால் மகிந்த ராஜபக்ஷவால் ஜனாதிபதியாக முடியாவிட்டால், அவருக்கு பதிலாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யலாம் என்ற தீர்மானத்தை தாங்கள் எடுத்தோம்.

பசில் எதிர்கட்சித் தலைவர் பதவியை கேட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாவின் வெற்றிக்காக பாடுபட்டோம்.

அரசாங்கத்தில் பசிலுக்கும் எங்களுக்குமான இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்துவந்தது.

யுகதனவி விடயத்திலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது.

இது தனிப்பட்ட பிரச்சினை இல்லை.

கொள்கை ரீதியான பிரச்சினை.

பொருளாதார பிரச்சினை இருக்கிறது.

இதுகுறித்த பொறுப்புகள் இன்றி நிதி அமைச்சர் இருந்தார்.

நாங்கள் அமைச்சர்களாக இருந்தால் அமைச்சரவைக்கு வர மாட்டேன் என்று பசில் கூறினார்.

ஜனாதிபதி வழமைப் போல குடும்பத்தை பாதுகாக்க முனைந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷவினால் வழிநடத்தப்படுகிறார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளுக்கு உரியவர்கள் யார் என்றே தெரியாது.

அந்த கட்சி ஒரு தனியார் சொத்து.

அதனை பயன்படுத்தி ஜனாதிபதிக்கு பசிலால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தம்மால் முடிந்தவரையில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.

அதுகுறித்து திருப்தியடைகிறோம்.

மக்கள் ஆணைக்கு எதிராக அரசாங்கம் செயற்படும்போது, மக்கள் ஆணையை பாதுகாக்க முயற்சித்துள்ளோம்.

கடந்த நாட்களில் நாங்கள் கூட்டாக இணைந்து, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான வழிகளை பரிந்துரைத்தோம்.

ஆனால் ஜனாதிபதியும் நிதியமைச்சரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு எங்களை பதவி விலக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள் (சிரிக்கிறார்)

பசில் ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை.

அமெரிக்காவில் அவர் பணசலவை குற்றத்துக்காக கைது செய்யப்படலாம்.

ஆனால் இன்னும் அவ்வாறு கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணம் இருக்கிறது.

அவர் அமெரிக்காவிற்கு ஆதரவாக இலங்கையில் செயற்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார்

நாட்டை மோசமான நிலைக்கு தள்ளிச் சென்று, நாட்டையும் மக்களையம் அமெரிக்காவுக்கு ஆதரவாக மாற்றுவதே பசிலின் திட்டமாக உள்ளது என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.