6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் இன்றுமுதல் குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
1 கிலோ செத்தல் மிளகாய் – 30 ரூபா குறைப்பு, புதிய விலை 1700 ரூபா.
1 கிலோ வெள்ளை பச்சை (கெக்குலு) 10 ரூபா குறைப்பு, புதிய விலை 169 ரூபா.
1 கிலோ சிவப்பு அரிசி (கெக்குலு) 8 ரூபா குறைப்பு, புதிய விலை 179 ரூபா.
1 கிலோ வெள்ளை நாடு 5 ரூபா குறைப்பு, புதிய விலை 184 ரூபா.
1 கிலோ கீரி சம்பா 4 ரூபா குறைப்பு, புதிய விலை 235 ரூபா.
1 கிலோ சிவப்பு பருப்பு 5 ரூபா குறைப்பு, புதிய விலை 365 ரூபா.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலை 80-100 ரூபாய் அளவில் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலை தற்போது 100 ரூபா
புறக்கோட்டை மொத்த சந்தை நிலவரப்படி, இறக்குமதி செய்யப்படுகின்ற வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 130 ரூபா
சீனி கிலோ ஒன்றின் மொத்த விலை 205 ரூபா