ஓய்வினை அறிவித்தார் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்

3 months ago
SPORTS
aivarree.com

மேற்கிந்தியத்தீவுகள் நட்சத்திரம் ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெற்றார்.

32 வயதான அவர், டிசம்பர் 3 முதல் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணியில் பெயரிடப்பட்டார்.

எனினும், அந்த தொடருக்கு முன்னதாகவே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

2015 இல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான டவ்ரிச், 2019 இல் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

அவர் 35 போட்டிகளில் விளையாடி 29.07 சராசரியில் 1570 ஓட்டங்களையும், மூன்று சதங்கள், ஒன்பது அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.