நிர்மாணத் துறையில் தொழில் செய்வதற்காக இலங்கை இளைஞர்களுக்கு விசேட திறன்மிக்க தொழிலாளர் வீசா பிரிவின் கீழ் ஜப்பானுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய மொழி புலமை மற்றும் உரிய பரீட்சையில் சித்தியடைவதற்கு உட்பட்டு விசேட திறன்மிக்க தொழிலாளர் வீசா வழங்கப்படும்.
இந்த வேலைத்திட்டம் இன்று (டிசம்பர் 01) முதல் அமுலுக்கு வரும் எனவும் மேலும் கூறினார்.