லியோ திரை விமர்சனம்

6 months ago
Gossip
aivarree.com

நடிகர் விஜயின் நடிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மாபெரும் தாதா ராம்ராஜ்ய வாரிசு என்ற சந்தேகத்தில் ஒரு அப்பாவி தாக்கப்படுகிறாரா? அல்லது அந்த வாரிசு உண்மையிலேயே அவர்தானா? என்பதுதான் கதை.

இன்னுமொருவழியில் சொல்வதானால், நாயகன் தன் குடும்பத்துக்கு பாதுகாவலனா? அல்லது அந்த குடும்பம்தான் நாயகனுக்கு பாதுகாவலா? என்ற கேள்விக்கான விடைதான் கதை.

ஆரம்பத்திலேயே கதையின் சுருக்கம் ஹைனா ஊடாக குறியீடாக சொல்லப்பபட்டிருக்கிறது.

பிரமாண்டமான காட்சி அமைப்புகள் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துகிறது.

லோகேஸ் கணகராஜ் இந்த படத்தில் காணாமல் போய் இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தில் அவர் பதித்த முத்திரையை இந்த படத்தில் பதிவு செய்ய தவறி இருக்கிறார். எல்சியூ என்ற விடயம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதைப் போலதான் தோன்றுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு அமர்க்கலமான படம். கொண்டாடுகிறார்கள். சிறிய ஒரு கதை என்றாலும், காட்சியமைப்பு, திரைக்கதை, இறுதிவரைக்கும் அந்த சஸ்பன்ஸை கொண்டு சென்றமை என்று எல்லாம் கச்சிதமாக செய்யப்பட்டிருக்கிறது.

சில இடங்களில் விஜய்தான் பலம். சில இடங்களில் விஜய்தான் பலவீனமும். காட்சிகள் சிலவற்றில் விஜய் ஒட்டாமல் நடித்திருப்பதைப் போன்றும் தோன்றும். ஆனால் புதிதாக ஒரு விஜயை இதில் பார்க்கலாம்.

அனிருத்தின் இசை பிரமாண்டமாக இருந்த போதிலும், விக்ரம், ஜெய்லர் போன்ற படங்களில் பேசப்பட்டதைப் போல இல்லை.

படத்தில் அதீத வன்முறைக் காட்சிகள். சில இடங்களில் வன்முறைகள் திணிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருக்கிறது. அடுத்தடுத்து வரும் புகைத்தல் காட்சிகள். பத்தாம் வகுப்பு மாணவன் தாம் சிகரட் பிடிப்பதை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று தந்தை விஜயிடம் கேட்பதெல்லாம் சற்று அதிகமாக படுகிறது.

நடிகர் அர்ஜுன் மாசாக இருக்கிறார். ஆனால் சஞ்சய் தத் பயன்படுத்தப்பட்ட அளவுக்கு கூட அர்ஜுன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. சஞ்சை தத் தமக்கு வழங்கப்பட்ட திரை நேரத்தை அமர்க்கலப்படுத்தி இருக்கிறார்.

இலங்கைப் பெண் ஜனனியும் திரையில் தோன்றும் ஓரிரு நிமிடங்கள் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் இன்னும் வாய்ப்புகள் குவிய வாழ்த்துகள்.

படம் ஒருமுறை பார்க்கலாம் – சிறார்களுடன் பார்ப்பதென்றால் யோசித்து பார்க்க வேண்டும்.

அய்வரி புள்ளி – 3/5

Suggest Video