வாகன இறக்குமதி | அரசாங்கம் புதிய அப்டேட்

6 months ago
aivarree.com

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையிலேயே தளர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என தாம் நம்புவதாக அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள அந்நியச் செலாவணி உத்தரவுளை திருத்தல் மற்றும் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளன.

அதன் அடிப்படையில் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டது.

ஆனால் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க இன்னும் காலம் எடுக்கும் என அவர் கூறினார்.

கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இம்மாத இறுதிக்குள் அனுமதி வழங்கப்படுமென வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் பின்னர் அரசாங்கம் தமது தீர்மானத்தில் இருந்து பின்வாங்கியது.