2024 ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இந்த நிதி இந்த ஆண்டு தேர்தலுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்குள் செலவுகளை நிர்வகிப்பது குறித்து அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.
இதேவேளை, விசேட வர்த்தமானியின் பிரகாரம் விசாரணை ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் 2024ஆம் ஆண்டு தேர்தல்களை பாதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.