50,000 வாகனங்களைத் திரும்பப்பெறும் டொயோட்டா

4 months ago
aivarree.com

உலகின் மிகப்பெரும் காருற்பத்தி நிறுவனமான டொயோட்டா, அமெரிக்காவில் விநியோகித்த 50,000 கார்களை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது. 

2003-2004 காலப்பகுதிக்குரிய Corolla, 2003-2004 – Corolla Matrix, 2004-2005 – RAV4 ஆகிய வாகனங்களே இவ்வாறு மீளழைக்கப்பட்டுள்ளன. 

இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டக்காட்டாவின் எயார் பேக்குகள், வெடிக்கும் அபாயம் உள்ளது. 

இதனால் சாரதி மற்றும் பயணி உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

எனவே உடனடியாக அவ்வகை வாகனங்களை திருத்திக் கொள்ளுமாறும் டொயோட்டா அறிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் இலங்கையில் உள்ள இவ்வகை வாகனங்கள் தொடர்பாக டொயோட்டா லங்கா நிறுவனம் இன்னும் எந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.