72.07% மாணவர்கள் உயர் தரத்துக்கு தகுதி – கல்வி அமைச்சர்

10 months ago
Sri Lanka
aivarree.com

2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 72.07 உயர் தரத்துக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் இன்று (01) காலை தெரிவித்தார்.

மேலும் 13,588 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் 2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.


அதேநேரம், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.