மட்டக்களப்பு, கொக்காட்டிச்சோலையில் பிரபாகரனின் பிறந்த நாளில் (மாவீரர் தினம்) கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக அவர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், குறித்த பெண்ணை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற புதன்கிழமை (29) உத்தரவு பிறப்பித்தது.
குறித்த பெண் கடந்த 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கேக் ஒன்றில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை பொறித்து வெட்டிக் கொண்டாட முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விறக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.