சுகாதார அமைச்சின் செயலாளராக பாலித மஹிபால பதவியேற்பு

6 months ago
Sri Lanka
aivarree.com

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்தியர் பாலித மஹிபால இன்று (20) பதவியேற்றுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஓய்வு பெற்றதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பாலித மஹிபால, இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் ஏப்ரல் 2019 இல் பாகிஸ்தானில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.

பொது சுகாதாரம், சுகாதாரத் துறை மேலாண்மை, வணிக நிர்வாகம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகிய துறைகளில் பல அனுபவங்களைக் கொண்ட அவர் மருத்துவத் துறையில் முக்கிய நபராக உள்ளார்.