இன்று ஜனாதிபதியை சந்திக்கும் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி

2 weeks ago
Sri Lanka
aivarree.com

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி திருமதி ஷென் யிக்ன் உள்ளிட்ட குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (20) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிக்ன் மற்றும் குழுவினர் நேற்று (18) இலங்கை வந்தடைந்தனர்.

அவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது பொருளாதார, அரசியல் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தக் குழுவினர் இன்று பிற்பகல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்திக்கவுள்ளனர்.