தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டினை முற்றாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
தாம் பாராளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எம்.பி என்ற வகையில் தனது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கியுள்ளளேன்.
சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.