100 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்பு

7 months ago
Sri Lanka
aivarree.com

யாழ்ப்பாணம் காரைநகரில் 100 கிலோ கிராமுக்கு அதிகமான கேரளா கஞ்சா இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், கடற்படையினரும் முன்னெடுத்துள்ளனர்.