யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (19) செங்கடல் வழியாகப் பயணித்த இஸ்ரேலிய சரக்குக் கப்பலை கைப்பற்றியுள்ளனர்.
சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட அல் அரேபியா செய்திச் சேவை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
துருக்கியில் இருந்து இந்தியாவிற்கு கார்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படும் “கேலக்ஸி லீடர்” என்ற கப்பலே கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனில் 22 பணியாளர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களுக்கு மத்தியில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.