வர்த்தக வங்கிகளில் டொலர் பெறுமதி

8 months ago
aivarree.com

கடந்த வெள்ளிக்கிழமையுடன் (17) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும்பாலும் நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.41 ரூபாவிலிருந்து 321.92 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.65 ரூபாவிலிருந்து 333.14 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.74 ரூபாவிலிருந்து 320.99 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.00 ரூபாவிலிருந்து 332.00 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 323 ரூபாவாகவும், 333 ரூபாவாகவும் காணப்படுகிறது.