இலங்கையில் யானைகளின் உயிரிழப்பு அதிகரிப்பு

3 months ago
Sri Lanka
aivarree.com

யானை – மனித மோதல் காரணமாக வருடாந்தம் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் 2023.11.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொரப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

உயிரிழக்கும் யானைகளைப் பாதுகாப்பதற்கு வனவிலங்குகள் நிர்வாகத்தில் சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் மேலும் திருத்தப்பட வேண்டிய பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுற்றாடல் சட்டக் குழுவின் அழைப்பாளர் சாரக ஜயரத்ன உள்ளிட்ட குழுவினரால் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு முன்வைத்த பிரேரணைக்கு அமைய வனசீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.