இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் மீண்டும் ஆரம்பம்

8 months ago
World
aivarree.com

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பின்னர் வெள்ளிக்கிழமை (01) காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய போராளிக் குழு ஏழு நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலிய எல்லையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் மோதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் சுட்டிக்கட்டியுள்ளது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு (0500 GMT) போர்நிறுத்தம் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, காசாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கெட்டை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது.

போர்நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து, இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நவம்பர் 24 அன்று தொடங்கிய ஏழு நாள் போர் இடைநிறுத்தம், இரண்டு முறை நீட்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.