இலங்கையின் 3 விமான நிலையங்களும் அதானி வசம்

3 weeks ago
Sri Lanka
aivarree.com

இந்தியவின் அதானி குழுமம் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட நாட்டின் மூன்று விமான நிலையங்களை நிர்வகிக்க இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார். 

இரு தரப்புக்கும் இடையில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் நிர்வாக ஒப்பந்தங்களும் பேசப்படும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பன அதானி குழுமத்துக்கு வழங்கப்படும் ஏனைய விமான நிலையங்கள் ஆகும்.